வைகல் நாதர் கோவில் - தல வரலாறு

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : வைகல் நாதர், சண்பகாரண்யேசுவரர்,
இறைவியார் திருப்பெயர் : வைகல் நாயகி, வைகலாம்பிகை, சாகாகோமளவல்லி, கொம்பியல் கோதை,
தல மரம் :செண்பகம்,
தீர்த்தம் : செண்பக தீர்த்தம்,
வழிபட்டோர் :பிரமன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).லட்சுமி தேவியார் வழிபட்ட தலம்.,
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்,

தல வரலாறு:


இக்கோயில் கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்றாகும்.

இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

கேட்டதெல்லாம் கொடுக்கும் இறைவன்.

முன்னொரு காலத்தில் பூமி தேவி, தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்டினாள். இவளது வேண்டுகோளை ஏற்ற பெருமாள் பூமிதேவியை திருமணம் செய்து கொண்டார். இதனால் மகாலட்சுமிக்கு பெருமாள் மீதுகோபம் ஏற்பட்டது. எனவே லட்சுமி தேவி செண்பகவனம் எனும் இத்தலத்தை அடைந்து கடும் தவம் செய்தாள். பெருமாளும், பூமி தேவியும் பிரிந்து போன லட்சுமியை காண இத்தலம் வந்தனர். இவர்களை தேடி வந்த பிரம்மனும் இத்தல இறைவனை வழிபட்டார். சிவனின் திருவருளால் பெருமாள் லட்சுமி, பூமாதேவி இருவரையும் மனைவியராகப்பெற்றார்.

வைகல் என்ற இந்த சிறிய கிராமத்தில் 3 சிவாலயங்கள் இருக்கின்றன. 1) ஊரின் தென்புறமுள்ள திருமால் வழிபட்ட விசுவநாதர் ஆலயம், வலக்கண் போல ஊரின் தென்பால் விளங்குகிறது. 2) பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரீசுவரர் ஆலயம், இடக்கண் போலத் திகழ்கிறது. 3) ஊரின் மேற்கு திசையிலுள்ள வைகல்நாதர் ஆலயம். இதுவே மாடக்கோயில். இது சிவபெருமானின் நெற்றிக்கண் போல விளங்குகிறது. இதுவே தேவாரப் பதிகம் பெற்றது.
இவ்வூரிலுள்ள மற்ற இரண்டு ஆலயங்களும் திருமால், பிரம்மா, திருமகள் ஆகியோராலும், இந்திரன் முதலான தேவர்களாலும், அகத்தியர் போன்ற முனிவர்களாலும் வழிபட்ட கோயில்களாகும்.

வலக்கண்ணாக விசாலாட்சி உடனாகிய விஸ்வநாதர் கோயில், இடக்கண்ணாக பெரியநாயகி சமேத பிரமபுரீஸ்வரர் கோயில், நெற்றிக்கண்ணாக கொம்பியல் கோதை உடனாகிய வைகல் நாதர் திருக்கோயில். இந்த மூன்று திருக்கோயிலுமே பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமாகும். தன் குட்டியை தேடி வருந்திய யானை, தனது தந்தத்தால் இங்கிருந்த ஈசல் புற்றை காலால் மிதித்து சேதப்படுத்தியது. தன் புற்றிணை மிதித்து அழித்த யானையின் உடலை ஈசல் கடித்து கொன்றன. தங்கள் தவறை உணர்ந்த யானைக்குட்டியும், ஈசலும் இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றன என புராணம் கூறுகிறது. 

இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள படிகள் மூலம் ஏறி மாடக்கோவிலின் முன்புற மேடையை அணுகலாம். முன்புற மேடையில் இறைவன் சந்நிதியை நோக்கி நந்தி மண்டபம் உள்ளது. மாடக்கோவிலின் உள்ளே இறைவன் வைகல் நாதர் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருட்காட்சி தருகிறார். வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கொம்பியல்கோதையின் சந்நிதி அமைந்துள்ளது. வள்ளி தெய்வானை சமேத முருகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஷ்ணு ஆகியோர் சந்நிதிகளும் ஆலயத்தில் உள்ளன. காகவாகனர் சனீஸ்வரருக்கும் தனி சந்நிதி உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறம் விநாயகர் உள்ளார். வெளி திருச்சுற்றில் வலப்புறம் அம்மன் சன்னதியும், இடப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளன. காலபைரவரும், சனி பகவானும் உள்ளனர். கோயில் சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. மூலவருக்கு எதிராக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. வெளியே வலப்புறம் விநாயகர் உள்ளார். மூலவருக்கு முன்பாக நந்தி உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டும் உள்ளார். திருச்சுற்றில் விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதி, ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய பெருமாள் சன்னதி, கஜலட்சுமி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன.


போன்:  +91- 435 - 246 5616

அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு கும்பகோணம் - காரைக்கால் பேருந்து வழித் தடத்தில் திருநீலக்குடி தாண்டி, பழியஞ்சிய நல்லூர் கூட்ரோடு என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் திரும்பி பழியஞ்சிய நல்லூரை அடைந்து, மேலும் 2 கி.மீ. அதே சாலையில் சென்றால் வைகல் கிராமத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து கிழக்கே சுமார் 12 கி.மி. தொலைவிலும், கொல்லுமாங்குடிக்கு மேற்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும் உள்ளது. திருநீலக்குடி என்ற மற்றொரு சிவஸ்தலம் இங்கிருந்து 3 கி.மி. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள பெரிய நகரம் கும்பகோணம்.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். கோவில் மெய்காப்பாளர் அருகிலேயே இருப்பதால் எந்நேரமும் தரிசனம் செய்ய இயலும்.


இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

வைகல் என்ற இந்த சிறிய கிராமத்தில் 3 சிவாலயங்கள் சிவபெருமானின் நெற்றிக்கண் போல விளங்குகிறது.

மூன்று திருக்கோயிலுமே பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமாகும்.

இக்கோயில் கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்றாகும்.