வேதபுரீஸ்வரர் திருக்கோயில், இருஞ்சியூர் - தல வரலாறு- பாடல் பெற்ற தலம் இல்லை

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

மூலவர் : வேதபுரீஸ்வரர்
அம்மன்/தாயார் : வேதநாயகி
தீர்த்தம் : -
தலமரம்: -
வழிபட்டோர் : சத்தி நாயனார்
தேவாரப் பாடல்கள் :- -

இரிஞ்சியூர்  நாயன்மார்களில் ஓருவரான சத்தி நாயனார்   அவதாரத் தலம் மற்றும் முக்தி தலம் .

சத்தி நாயனார் புராணம்

“கழற்சத்தி வரிஞ்சையார் கோ னடியார்க்கும் மடியேன்” – திருத்தொண்டத் தொகை

தல வரலாறு:

காவிரி பாயும் சோழ வளநாட்டில் வரிஞ்சையூர் என்ற தலத்தில் வேளாளர் குலத்தில் சத்தி நாயனார் என்னும் நாமமுடைய சிவத்தொண்டர் வாழ்ந்து வந்தார்.  நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரிலிருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது வரிஞ்சையூர் என்னும் அழகிய கிராமம். தற்போது அதனை இரிஞ்சியூர் என்று அழைக்கிறார்கள். 

சோழ வள நாட்டிலே அமைந்துள்ள வரிஞ்சையூர் சிவனடியார்களை நிந்தித்தவர்களைத்   தண்டிக்க வேண்டும் என்ற உணர்வுடன் தொண்டாற்றியவர் சத்தி நாயனார். அறுபத்து மூவருள் ஒருவரான இவரை , சுந்தரமூர்த்தி சுவாமிகள், "  சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் " என்று பாடுகிறார்.

சத்தி நாயனார் சிவனடியார்களைப் பழித்து யாரேனும் இகழ்ந்து பேசினால் அக்கணமே அவர்களது நாவினை குறட்டினால் பிடித்து அரிவார். சத்தி என்ற  ஆயுதத்தை இதற்காக அவர் ஏந்தி வந்தார். இத்தகைய வலிய மனமும் சக்தியும் வாய்க்கப் பெற்று ஒழுகி வந்தமையால் தான் இவர் சத்தி நாயனார் என்று திருநாமம் பெற்றார். சிவனடியார்களை எவரும் இகழாவண்ணம் காத்து வரும் பணியில் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்தார். சிவபெருமானுக்கு அளவிலா தொண்டாற்றி வந்த இத்திருத்தொண்டர்,  சிவபெருமானுடைய அழகிய சேவடி நீழலை அடைந்தார்.

கோவில் அமைப்பு:

வரிஞ்சையூரில் உள்ள சிவாலயத்தில் சத்தி நாயனாருக்காக தனிச் சன்னதி அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் கூப்பிய கரங்களுடன், சுவாமி சன்னதியை நோக்கியவாறு நாயனார் காட்சி அளிக்கிறார். அம்பிகை சன்னதி தெற்கு நோக்கியது. சுவாமி சன்னதியின் அர்த்த மண்டபத்தில் பெரிய புராணத்தில் வரும் சத்தி நாயனார் புராணத்தைக் கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார்கள்.
ஐப்பசி மாதப் பூச நக்ஷத்திரத்தன்று நாயனாரது குருபூஜை நடைபெறுகிறது.

போன்:  -

-

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

நாகை மாவட்டம், கீழ்வேளூர் தாலுகா, தேவூர் அஞ்சல், இருஞ்சியூர் கிராமம்.


 நாயன்மார்களில் ஓருவரான சத்தி நாயனார்   அவதாரத் தலம் மற்றும் முக்தி தலம் .

சத்தி நாயனார் சிவனடியார்களைப் பழித்து யாரேனும் இகழ்ந்து பேசினால் அக்கணமே அவர்களது நாவினை குறட்டினால் பிடித்து அரிவார்.

இதனால் ஆயுள் விருத்திக்காகவும், ஆயுள் தோஷம், நோயினில் பீடிக்கப் பட்டோர் குணமாக வேண்டுதலை வேண்டிக் கொண்டு இங்கு வந்து தொழுகிறார்கள்.