இறைவர் திருப்பெயர் : சிவபுரநாதர், பிரம்மபுரி நாதர்
இறைவியார் திருப்பெயர் : சிங்காரவல்லி, பெரியநாயகி
தல மரம் : செண்பகம்
தீர்த்தம் : சந்திர புஷ்கரிணி, சுந்தர தீர்த்தம்
வழிபட்டோர் : குபேரன், ராவணன், அக்னி, திருமால், திருமகள்
தேவாரப் பாடல்கள் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்
தல வரலாறு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 130 வது தேவாரத்தலம் ஆகும்.
"சிவபுரம்" என்று சிவபெருமானின் நாமத்தினைக் கொண்டு அழைக்கப்படும் சிறப்பினைப் பெற்ற ஒரே தலம் இதுவேயாகும்.
சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்.
இவ்வூரில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒர் சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனால்தான் ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு. அவ்வாறு பாடிய இடம் இன்று "சுவாமிகள் துறை' என்றழைக்கப்படுகிறது. (அரிசொல் ஆறு) அரிசிலாறு பக்கத்தில் ஓடுகின்றது. இவ்வூர் பட்டிடைத்து விநாயகர் கோயிலில் பட்டினத்தார் அமர்ந்த திருக்கோலத்தில் சிலை வடிவாய் உள்ளார்.
ஒருமுறை கைலாயத்திற்கு ராவணன் தூய்மையற்றவனாக வந்தான். அவனை நந்தி தேவர் தடுத்து நிறுத்தினார். தன் சகோதரனான ராவணனை கைலாயத்திற்குள் அனுமதிக்கும்படி குபேரன் பரிந்து பேச, கோபமுற்ற நந்தி, குபேரனை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். இதனால் பதவியிழந்த குபேரன், தனபதி என்னும் பெயருடன் மன்னனாக பூமியில் வாழ்ந்தான். சிவபக்தனான தனபதிக்கு சிவனுக்கு பரிகார பூஜை செய்து இழந்த பதவியைத் திரும்பப் பெற்றான். குபேரன் பூஜித்த லிங்கம் சிவகுருநாதர் என்னும் திருநாமம் பெற்றது.
குபேரபுரம், பூ கயிலாயம், சண்பகாரண்யம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும். திருமால் (சுவேதவராக) வெள்ளைப்பன்றி உருவில் பூஜித்த தலம். திருமகள், குபேரன், ராவணன், அக்னி முதலானோர் வழிபட்ட தலம். சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும். குபேரன் தனபதி என்ற பெயருடைய மன்னனாகப் பிறந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்ற தலம்.
கோஷ்ட மூர்த்தங்களாக நடன விநாயகர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரமன், துர்க்கை முதலானோர் அருள்பாலிக்கின்றனர். தெட்சிணாமூர்த்திக்குப் பக்கத்து சுவரில் திருமால் வெண் பன்றியாக இருந்து தாமரை மலர்களைக் கொண்டு வழிபடும் ஐதீக சிற்பம் உள்ளது. வெளிச் சுற்றில் விநாயகர் சந்நிதியும், அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. இந்நிகழ்ச்சியை அப்பர் பெருமான் இத்தலத்துத் திருத்தாண்டகத்தில் ""பாரவன்காண்'' என்று தொடங்கும் பாடலில் ""பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன்காண்'' என்று பாடியுள்ளார்.
இத்தல நடராஜர் மிக அழகிய திருவுருவம் கொண்டவர். இத்தல முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் அருளியுள்ளார்.
குபேர பூஜை: இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி லிங்கத் திருமேனியாக அருள்பாலிக்கிறார். தீபாவளி நாளில் இத்தலத்தில் நடக்கும் குபேர பூஜை சிறப்பு மிக்கது. அப்போது வழிபட செல்வ வளம் உண்டாகும் என்பது ஐதீகம்.
அம்பாள் சிங்காரவல்லி என்னும் ஆர்யாம்பாள். பெரியநாயகி என்றும் பெயருண்டு. குபேரன் தனபதியாக இருந்த போது, அவனுக்கு தந்தையாக இந்திரனும், தாயாக இந்திராணியும், குழந்தையாக அக்னியும் வந்தனர். அவர்கள் பிரகாரத்தில் லிங்க வடிவில் வீற்றிருக்கின்றனர்.
இங்கு வந்த சம்பந்தர் இத்தலத்தை காலால் மிதிக்க அஞ்சி அங்கப்பிரதட்சணம் செய்து ஆலயத்தை வலம் வந்து சிவனைப் பாடி வழிபட்டார். அதனடிப்படையில், சிவனுக்கு அங்கப் பிரதட்சண வழிபாடு நடக்கிறது. பட்டினத்தாரின் சகோதரி இங்கு வாழ்ந்ததாகச் சொல்வர். அம்மனுக்கு 21 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, குழந்தையை சந்நிதியில் கிடத்தி வேண்டிக் கொள்கின்றனர். ஆறுமுகம், பன்னிரண்டு கரங்களுடன் மற்ற கோயில்களில் சண்முகராக காட்சி தரும் முருகன் இங்கு ஒருமுகம், நான்கு கைகளுடன் வீற்றிருப்பது வித்தியாசமான தரிசனம்.
தட்சிணாமூர்த்தியின் காலடியில் ராகு இருப்பது மற்றொரு சிறப்பம்சம். இவரை வழிபட குரு, நாகதோஷம் நீங்கும்.
திருப்புகழ் தலம்: இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் மயிலுடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் காலணிகளுடன் விளங்குவது மிகவும் சிறப்பானதாகும்.
கோவில் அமைப்பு:
கிழக்கு நோக்கி உள்ள இவ்வாலயம் ஒரு 5 நிலை இராஜ கோபுரத்தையும், 2 பிரகாரங்களை உடையதாகவும் அமைந்துள்ளது. இராஜ கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் உள்ள இரண்டாவது பிரகாரத்தில் கொடிமரத்தையும், கொடிமர விநாயகரையும் காணலாம். இந்த பிரகாரத்தின் வலதுபுறம் பைரவர் சந்நிதி தெற்கு நோக்கி மைந்துள்ளது.
3 நிலை உள்ள 2-வது கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் முதல் பிரகாரம் உள்ளது. உள்கோபுரத்தில் உட்சுவரில் சந்நிதியைப் பார்த்தவாறு சூரிய சந்திரரின் உருவங்கள் உள்ளன. எதிரே முன் மண்டபம், அதன் பின் இறைவன் கருவறையில் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். மூலவர் கம்பீரமான சற்றுப் பெரிய சிவலிங்கத் திருமேனி, இவர் மகாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்டவர்.
இங்கு சித்திரை மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளி சுவாமிமீது விழுகிறது. கோஷ்ட தெய்வங்களாக தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் சுவரில் இத்தல வரலாறாகிய திருமால் வெண் பன்றியாக இருந்து சிவனை வழிபட்ட சிற்பம் உள்ளது. இந்நிகழ்ச்சியை அப்பர் பெருமான் இத்தலத்துத் திருத்தாண்டகத்தில் "பாரவன்காண்" என்று தொடங்கும் பாடலில் "பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன்காண்" என்று பாடியுள்ளார். முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது.
இங்குள்ள நடராசர் திருமேனி மிகவும் அழகானது. பாதுகாப்புக் கருதி, இப்போது திருவாரூர்ச் சிவாலயத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது வேறொரு நடராசத் திருவுருவம் சிவகாமியுடன் எழுந்தருளுவித்து வழிபட்டு வரப்பெறுகின்றது. நடராசப் பெருமானுக்கு எதிரில் உள்ள நால்வர் சந்நிதியில் பரவையாரும் இடம் பெற்றுள்ளார்.
வெளிப் பிரகாரத்தில் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பைரவர் விசேஷமான மூர்த்தி. இவருக்கு காலைசந்தி, அர்த்தசாமம் ஆகிய காலத்தில் அபிஷேகம் செய்து வடைமாலை சாத்தி, தயிர்சாதமும் கடலையுருண்டையும் நிவேதித்து சிவகுருநாதரை அங்கப்பிரதட்சணம் செய்து வந்தால், வழக்குகளில் வெற்றி, தீராத நோய் தீரும் என்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இத்தலத்தில் கார்த்திகை மாதம் கோவிலுக்கு எதிரிலுள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பாகும். குபேரன், ராவணன், அக்னி முதலானோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.
ஒரு முறை நந்தியெம்பெருமானின் சாபத்திற்கு உள்ளான குபேரன் தனது பதவியை இழந்தான். குபேரன் பூவலகில் தனபதி என்ற பெயருடைய மன்னனாகப் பிறந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றான். தீபாவளி நாளில் இத்தலத்தில் குபேர பூஜை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்போது இங்கு வந்து இத்தல இறைவனை வழிபட செல்வ வளம் உண்டாகும் என்பது ஐதீகம்.
சிறப்புக்கள் :
குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் இங்குள்ள அன்னைக்கு அபிஷேக ஆராதனை செய்து, விரதமிருந்து 11 வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்ய குழந்தைப் பேறு கிடைக்கப்பெறுவர்.
சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்
போன்: 98653 06840
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் சாக்கோட்டை என்ற இடத்தில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு கிளைப்பாதையில் சுமார் 3 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மி. தூரத்தில் உள்ளது.
© 2017 easanaithedi.in. All rights reserved