திருஞானசம்பந்தர் அவதார இல்லம் - வரலாறு

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

வரலாறு:

இன்னிசையால் தமிழ் பரப்பும் திருஞானசம்பந்தர் பிறந்த இல்லம்.

இந்த இல்லம் ஸ்ரீ காஞ்சி காமக்கோடி பீடம் மடத்திடம் உள்ளது. வேத சிவாகம திருமுறை பாடசாலையாக திகழ்கின்றது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சிவபாத இருதயர்க்கும் பகவதியாருக்கும் பிறந்த ஆளுடையப் பிள்ளை தந்தையோடு நீராட சீர்காழி பிரம்ம புரீஸ்வரர் கோயில் குளக்கரைக்கு சென்ற ஆளுடையப் பிள்ளை அங்கு தேவி பார்வதியின் கையால் ஞானப்பால் உண்டு ஞானசம்பந்தன் எனப் பெயர் பெற்றார்.

'தோடுடைய செவியன்'என தனது முதல் பதிகத்தைப் பாடினார்.பின்பு பல தலங்களைப் பாடி பல அதிசயங்களை நிகழ்த்தி இறுதியாக  நல்லூர்  பெருமணம் எனும் ஆச்சாள் புரத்தில் திருமணக் கோலத்தில் தன் தாய்,தந்தை சுற்றத்தாருடன் சிவஜோதியில் கலந்தார்.

போன்:  - -

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

திருஞானசம்பந்தர் வாழ்ந்த வீடு, சீர்காழியில் திருஞானசம்பந்தர் தெருவில் அமைந்துள்ளது.


திருஞானசம்பந்தர் அவதார இல்லம்

திருஞானசம்பந்தர் வாழ்ந்த வீடு, சீர்காழியில் திருஞானசம்பந்தர் தெருவில் அமைந்துள்ளது.