யாழ்ப்பாண ஆறுமுகசுவாமி சித்தர் ஜீவசமாதி திருக்கோயில், திருப்புறம்பியம் - தல வரலாறு- பாடல் பெற்ற தலம் இல்லை

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

திருப்புறம்பியம் யாழ்ப்பாண ஆறுமுகசுவாமி சித்தர்

ஆறுமுகசுவாமிகள் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் அவதாரம் செய்து ஜீவ சமாதி அடைந்துள்ளார். ஜீவசமாதியில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் குருபூஜை விழா நடத்துவது வழக்கம்.

யாழ்ப்பாணம் ஆறுமுகசுவாமிகள் மதுரை திருஞான சம்பந்தர் திருமடம் ஆதீனத்தில் சந்நியாசம் ஏற்றார்கள், பிறகு சில காலம் கழித்து சுவாமிகள் கும்பகோணம் வந்து, அறுபத்து மூவர் குருபூஜை திருமடம் ஸ்தாபித்தார்கள். இம்மடத்தில் 63 நாயன்மார்களின் படங்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுடன் படங்களாக வரையப்பட்டிருந்தன.

பிறகு , யாழ்ப்பாணம் சுவாமிகள் மதுரை ஆதீனத்திற்குப்பட்ட ஸ்ரீ சாட்சிநாதர் ஆலயம் இருக்கும் திருப்புறம்பயம் கிராமத்திற்குச் சென்றார்கள். அங்கு மடம் அமைத்து அடியார்களை பேணி பணியாற்றினார்கள். அப்பகுதியில் அருளாளராக விளங்கிய தமது திருமடத்திலேயே ஜீவ சமாதி அடைந்துள்ளார்கள்.

ஜீவ சமாதி சமாதி மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கிழக்குப் பார்த்த சந்நதி அதற்கு எதிரில் அவருடைய சீடர்கள் மூவரின் ஜீவசமாதி உள்ளது.

இவர்கள் வழியில் அவரது சீடரான பிரகாசம் சுவாமிகள் தற்போது சுவாமிமலையில் அருளாசி வழங்கி வருகிறார்கள்.
2012-ல் மாலை பூஜையில் நாகஜோதி ரூபமாக காட்சி கொடுத்தார்கள். 2014-ல் வியாழக்கிழமை பிரதோஷ நாளில் யாழ்ப்பாண ஆறுமுக சுவாமி ஜீவசமாதி சிவலிங்க திருமேனியின் மீது நாகராஜா தன் சட்டையை உரித்து மாலையாக அணிவித்து அன்று இரவு வரை பக்தகோடிகளுக்கு அங்கேயே காட்சி கொடுத்தார்.

சிறப்புக்கள் :

இத்தலம் வந்து வேண்டுபவர்க்கு கர்ம வினைகளும், பாப வினைகளும் நீங்குகிறது.

மேலும் பிரிந்து வாழும் தம்பதியர் இணைவர். திருமண பாக்யம், குழந்தை பாக்யம் ஆகியவை கிட்டுகிறது.

போன்:  -

-
அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலை வழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மி. தொலைவிலுள்ள இன்னம்பர் திருத்தலத்தை அடுத்து அதே சாலையில் மேலும் சுமார் 3 கி.மீ. சென்றால் திருப்புறம்பியம் ஸ்தலம் உள்ளது. திருப்புறம்பயம் மடம் இருக்கும் தெருவிற்கு யாழ்ப்பாணம் சாமி மடம் சந்து என்றே விளங்குகிறது.


ஆறுமுகசுவாமிகள் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் அவதாரம் செய்து ஜீவ சமாதி அடைந்துள்ளார்.

அவரது சீடரான பிரகாசம் சுவாமிகள் தற்போது சுவாமிமலையில் அருளாசி வழங்கி வருகிறார்கள்.

அவருடைய சீடர்கள் மூவரின் ஜீவசமாதி உள்ளது.

பிரதோஷ நாளில் யாழ்ப்பாண ஆறுமுக சுவாமி ஜீவசமாதி சிவலிங்க திருமேனியின் மீது நாகராஜா தன் சட்டையை உரித்து மாலையாக அணிவித்து அன்று இரவு வரை பக்தகோடிகளுக்கு அங்கேயே காட்சி கொடுத்தார்.