இறைவர் திருப்பெயர் : சத்யவாகீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர்,அன்பிலால் ஆலந்துறையார்,
இறைவியார் திருப்பெயர் : சௌந்தர நாயகி,
தல மரம் : ஆல மரம், வில்வம் மரம்,
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்,
வழிபட்டோர் : பிரமன், வாசீக முனிவர் ,
தேவாரப் பாடல்கள் :திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்,
தல வரலாறு:
இத்திருக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று நம்பப்படுகிறது .
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
பிரம்மன் வழிபட்ட மூர்த்தம் பிரம்மபுரீஸ்வரர் என்ற நாமமும் இவருக்கு உண்டு.
திருஞானசம்பந்தரின் பாட்டை நன்கு கேட்பதற்காக விநாயகர் தன் யானைக் காதைப் பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டதால், இத்திருகோவிலில் இருக்கும் விநாயகர் "செவி சாய்த்த விநாயகர்" என்றும் அழைக்கப்படுகிறார்.
தேன் சுவை பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் சிவத்தலங்கள் பலவற்றிற்கு வந்தார். சிவனுக்கு இவரைச் சோதிக்க ஆசை. காவிரியில் தண்ணீர் கரை புரண் டோடச் செய்தார். ஞானசம்பந்தரால் கோயில் இருக்கும் இடத்தை அடைய முடியவில்லை. தூரத்தில் நின்ற படியே சுயம்புவாய் அருள்பாலிக் கும் சிவபெருமானைப் பாடினார். காற்றில் கலந்து வந்த ஒலி ஓர ளவே கோயிலை எட்டியது. அங் கிருந்த சிவமைந்தர் மூத்த விநாயகர், "இளைய பிள்ளையார்' எனப்பட்ட தன் சகோதரனுக்கு சமமான ஞானசம் பந்தனின் பாட்டைக் கேட்பதற்காக, தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டு ரசித்தார். அப்போது புன்முறுவல் முகத்தில் அரும்பியது. ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து ரசித்த அக்காட்சியை சிற்ப மாக வடித்தார் ஒரு சிற்பி. அச்சிலை இன்றும் எழிலுற இருக்கிறது. கோயி லில் ராஜகோபுரமும் இருக்கிறது.
ஊரின் பெயர் அன்பில், கோயிலின் பெயர் ஆலந்துறை. இரண்டும் சேர்த்து அன்பிலாந்துறை ஆயிற்று. 5 நிலை இராஜகோபுரத்துடன் விளங்கும் இத்தலத்தில் மூலவர் சத்யவாகீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புவாக எழுந்துள்ளார். பிரம்மா வழிபட்ட மூர்த்தம் ஆதலால் இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற நாமமும் உண்டு. கோயிலின் உள்ளே சப்தமாதர், பிட்சாடனர், விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், முருகன் சன்னதிகள் உள்ளன. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.
போன்: +91 431 254 4927, 099657 39750
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
திருச்சியில் இருந்து 20 கி.மி. தொலைவிலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 8 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. வைஷ்ணவ 108 திவ்யதேசங்களில் ஒன்றான அன்பில் வடிவழகிய நம்பியின் ஆலயம் இத்தலத்திற்கு மிக அருகில் உள்ளது. அன்பில் மாரியம்மன் கோவிலும் சிவாலயத்தில் இருந்து அருகில் உள்ளது. திருச்சி மற்றும் லால்குடியில் இருந்து அன்பில் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
© 2017 easanaithedi.in. All rights reserved