கடிக்குளம் திருக்கோயில் - தல வரலாறு

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : கற்பக நாதர்
இறைவியார் திருப்பெயர் : சௌந்திரநாயகி
தல மரம் : பலா
தீர்த்தம் : விநாயக தீர்த்தம்( கழக்குளம்)
வழிபட்டோர் : விநாயகர், கார்த்திகாச்சுனன் என்ற அரக்கன்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - பொடிகொண் மேனிவெண்.


தல வரலாறு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 173 வது தேவாரத்தலம் ஆகும்.

விநாயகர் இறைவனைப் பூசித்து, மாம்பழம் பெற்ற பதி.

கார்த்திகாச்சுனன் என்ற அரக்கன் கற்பக லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.

 

கார்த்திகாச்சுரன் என்ற அரக்கன் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரங்கள் பல பெற்றான்.தான் வேண்டும் போதெல்லாம் கற்பக விருட்சம் போல வரங்களை அள்ளித்தந்த இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தான். இதனால் இத்தல இறைவன் கற்பகநாதர் என வழங்கப்படுகிறார். கற்பக விநாயகர் கற்பகநாதரை வழிபட்டு மாங்கனி பெற்றுள்ளார்.

இத்தல சிவபெருமான் 8 முக பட்டை லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரை தரிசிப்பதால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இவரை அஷ்டமி திதியிலும், சனிக்கிழமை புத ஹோரையிலும் குங்குமப்பூவுடன் வெண்ணெய் சேர்த்து காப்பிட்டு வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் வெண்ணெய் தானம் செய்வது சிறந்தது. ராமர் சேது சமுத்திரத்தில் பாலம் கட்டும் முன்பாக இத்தலம் வந்து கற்பக விநாயகரையும், கற்பகநாதரையும் வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது.

இதன் காரணமாக கோதண்டராமர் கோயில் இத்தலத்தின் அருகே உள்ளது. ஒரு அந்தணர் தன் தந்தைக்கு பிதுர்கடன் செய்வதற்காக கொண்டு வந்த அஸ்தி இத்தலத்திற்கு வந்தவுடன் கொன்றை மலராக மாறியது என்பர்.

கோவில் அமைப்பு:

கோபுரத்திற்கு வெளியே நந்தி மண்டபம் உள்ளது. கோவிலுக்கு வடபுறம் விநாயக தீர்த்தம் உள்ளது. கோபுர வாயில் மாடங்களில் விநாயகர், சுப்பிரமணியர் காட்சி தருகின்றனர். உள்பிராகாரத்தில் நால்வர், தலவிநாயகர், முருகப்பெருமான், கஜலட்சுமி, தலமரம் பலா, சனீஸ்வரன், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் உள்ளன.

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக எட்டுப் பட்டைகளுடன் எழிலாகக் காட்சி தருகிறார்.
இவரை தரிசிப்பதால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவரை அஷ்டமி திதியிலும், சனிக்கிழமை புத ஹோரையிலும் குங்குமப்பூவுடன் வெண்ணெய் சேர்த்து காப்பிட்டு வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. நாடொறும் நான்கு கால வழிபாடுகள். ஆனித்திரு மஞ்சனம், நவராத்திரி, கார்த்திகை தீபம், திருவாதிரை, தைப்பூசம், அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி முதலிய சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ராமர் சேது சமுத்திரத்தில் பாலம் கட்டும் முன்பாக இத்தலம் வந்து கற்பக விநாயகரையும், கற்பகநாதரையும் வழிபாடு செய்ததாக தலபுராணம் கூறுகிறது.

கோதண்டராமர் கோயில் இத்தலத்தின் அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தின் கற்பக விநாயகர் கற்பகநாதரை வழிபட்டு மாங்கனி பெற்றுள்ளார். இவரின் சந்நிதி கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது. அருகில் கோதண்டராமர் கோவிலும் உள்ளது.

சிறப்புக்கள் :

சகல வரங்கள் பெற இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.

பித்ருக்களுக்கு பரிகாரம் செய்ய ஏற்ற தலம்.

இக்கோயிலுக்குக் கரையங்காடு என்ற ஊர் தஞ்சை மன்னரால் தரப்பட்டுள்ளது.



போன்:  +91- 4369 - 240 187 ,240632 ,99428 12437

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு திருவாரூர் திருத்துறைப்பூண்டியிலிருந்து தொண்டியக்காடு செல்லும் பஸ்சில் இத்தலத்தை அடையலாம். திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் சாலையில் சென்றால் சுமார் 15 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி இத்தலத்திற்கு உள்ளது.திருஇடும்பாவனம் இத்தலத்திலிருந்து மேற்கே 1 கி.மி. தொலைவில் உள்ளது. கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், ஒரு பிராகாரத்துடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.



திருக்கடிக்குளம் (தற்போது கற்பகநாதர் குளம் என்றும் கற்பகனார் கோவில் என்றும் வழங்கப்படுகிறது)


விநாயகர் இறைவனைப் பூசித்து.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக எட்டுப் பட்டைகளுடன் எழிலாகக் காட்சி தருகிறார்.



பித்ருக்களுக்கு பரிகாரம் செய்ய ஏற்ற தலம்.


விநாயகர் இறைவனைப் பூசித்து, மாம்பழம் பெற்ற பதி.