ஏகாம்பரநாதர் திருக்கோயில் - தல வரலாறு

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : ஏகாம்பரநாதர், திருவேகம்பர், தழுவக்குழைந்த நாதர்.
இறைவியார் திருப்பெயர் : ஏலவார்குழலி, காமாட்சியம்மை.
தல மரம் :மா மரம் (வேதம் மா மரமாக உள்ளது.)
தீர்த்தம் : கம்பா நதி, சிவகங்கை, சர்வ தீர்த்தம்.
வழிபட்டோர் : உமையம்மை, பிரம்மா, திருமால், ருத்திரர்.
தேவாரப் பாடல்கள் :
1. சம்பந்தர் -

1. வெந்த வெண்பொடிப் பூசு, .

2. அப்பர் -

1. கரவாடும் வன்னெஞ்சர்க்கு,
2. நம்பனை நகரமூன்றும்,
3. ஓதுவித் தாய்முன் அற,
4. பண்டு செய்த பழவினை,
5. பூமே லானும் பூமகள்,
6. கூற்றுவன் காண் கூற்றுவனை,
7. உரித்தவன்காண் உரக்களிற்றை.

3. சுந்தரர் -

1. ஆலந் தானுகந் தமுதுசெய்.

தல வரலாறு:

மூலவர் - அம்பாள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிருதிவி (மணல்) லிங்கம் ஆகும். இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது. பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை உலகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம்.
இது முக்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்த போது "உன்னைப் பிரியேன்" என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம் பாடி பெற்றதாக வரலாறு உண்டு.

காஞ்சிபுரத்திலுள்ள பழமையான கோயில்களுள் ஒன்று. பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படும் இக்கோயில், இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது எனக் கருதப்பட்டாலும், இக் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இம் மன்னன் காலத்துக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள், இவ்விடத்தில செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை வரலாற்றாய்வாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது. இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம்,விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம் மண்டபம் அதற்கு முன், நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும், அது பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் திருத்தப்பட்டதாகவும் தெரிகின்றது.

ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன. இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது.
சிறப்புக்கள் :

மூலவர் - அம்பாள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிருதிவி (மணல்) லிங்கம் ஆகும். .

தல புராணம் - மா மரத்தைத் தலமரமாக (ஏ+ஆம்ரம்= மாமரம்) கொண்டுள்ளதால் ஏகாம்பரம் எனப் பெற்றது. கச்சி என்பது ஊரின் பெயர் .

சுந்தரருக்கு இடக்கண் ஒளி பெற்ற தலம்.

பிரம்மா, திருமால், ருத்திரர் பூசித்த இலிங்கங்கள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக்கம்பம், நல்லக்கம்பம் எனப்படுகின்றன.

சக்தி பீடமாகிய காமக்கோடிப் பீடம் உள்ள தலம்.

மூவர் பெருமக்களாலும் பாடப் பெற்றத் திருத்தலம்.போன்:  +91- 44-2722 2084.

அமைவிடம் மாநிலம் :

காஞ்சிபுரம் சென்னையில் இருந்து 80 கி.மி. தொலைவில் இருக்கிறது. சென்னையில் இருந்து ரயில் மற்றும் பேருந்து வசதிகள் அதிகம் இருப்பதால் இத்தலத்திற்குச் செல்வது மிகவும் எளிது.மூலவர் - அம்பாள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிருதிவி (மணல்) லிங்கம் ஆகும்.

சுந்தரருக்கு இடக்கண் ஒளி பெற்ற தலம்.

இது முக்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது.

ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம்.