பாரிஜாதவனேஸ்வரர் திருக்களர் - தல வரலாறு

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : களர்முளை நாதர், பாரிஜாதவனேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : இளங்கொம்பன்னாள், அமுதவல்லி, அழகேஸ்வரி
தல மரம் : பாரிஜாதம் (பவளமல்லி)
தீர்த்தம் : துர்வாசர் தீர்த்தம், பிரமதீர்த்தம், ருத்ர தீர்த்தம், ஞான தீர்த்தம்
வழிபட்டோர் : பராசர முனிவர், துர்வாசர், கால பைரவர்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - நீரு ளார்கயல் வாவி.


தல வரலாறு:

களர் நிலத்தில் உள்ள கோயிலாததால், இப்பெயர் பெற்றது. துர்வாசருக்கு இறைவன் நடனக் காட்சி தந்தது.கோவில் அமைப்பு: காவிரி தென்கரைத் தலங்களில் 105 தலமாக விளங்கும் இத்தலம் ஊரின் நடுவே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் எதிரே நான்கு பக்கங்களிலும் நான்கு படித்துறைகளைக் கொண்ட பெரிய திருக்குளம் உள்ளது. 80 அடி உயரமுள்ள இராஜகோபுரம் 5 நிலைகளை உடையது. கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. இவ்வாலயம் மூன்று பிரகாரங்களைக் கொண்டுள்ளது. விருட்சம் (பவள மல்லிகை) தலவிருட்சமாக உள்ளது.அம்மன் சந்நிதி கருவறைச் சுற்றில் சிம்ம வாகனத்தில் அமர்ந்துள்ள அஷ்டபுஜ துர்க்கை சந்நிதி உள்ளது. வலம்புரி விநாயகர் சந்நிதியும், துர்வாசர் சந்நிதியும், விஸ்வநாதர், கஜலட்சுமி, 63 நாயன்மார்கள் சந்நிதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன. துர்வாச தீர்த்தம், ஞான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ருத்ர தீர்த்தம் ஆகியவை இவ்வாலயத்திலுள்ள தீர்த்தங்கள் ஆகும்.

த்தலத்தில் உள்ள முருகப் பெருமான் மிக்க அழகுடன் காட்சி தருகிறார். ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானை உடன் இல்லாமல் தனியே குரு மூர்த்தமாக அருள் புரிகிறார். முருகப் பெருமான் 60000 முனிவர்களுக்கும், துர்வாசருக்கும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தது இத்தலத்தில் தான் என்பது ஐதீகம்.பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர் தானும் அந்த பாக்கியத்தைப் பெற விரும்பினார். துர்வாச முனிவர் இத்தலத்தின் மகிமையை உணர்ந்து தேவலோகத்தின் சிறந்த மலரான பாரிஜாதத்தை இங்கு கொண்டு வந்து வைத்து வளர்க்களானார். அது நாளடைவில் மிகவும் பெருகி பாரிஜாத வனமாயிற்று. பிறகு துர்வாச முனிவர் ஒரு சிவலிங்கம் அமைத்து பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் அம்மனையும் ஸ்தாபித்து தேவதச்சன் மூலமாக இக்கோவிலை எடுப்பித்தார் என்று தலவரலாறு கூறுகிறது. இத்தலத்தில் துர்வாச முனிவருக்கு இறைவன் நடராஜர் பிரமதாண்டவ தரிசனம் கொடுத்தருளியதால் துர்வாசர் இத்தலத்தில் .எப்போதும் நடராஜ பெருமானின் பிரமதாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். இதன் அடையாளமாக இவ்வாலயத்தில் துர்வாசர் சந்நிதியும், நடராஜர் சந்நிதியும் எதிரெதிரே அமைந்துள்ளது. நடராஜ பெருமானின் 8 தாண்டவ தலங்களுள் இரண்டாவது தலமாக திருக்களர் தலம் அமைந்திருக்கிறது.இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.



சிறப்புக்கள் :

துர்வாசருக்கு இறைவன் நடனக் காட்சி தந்தது. .

சோழர்கள் கால எட்டு கல்வெட்டும், பாண்டியர்களது இரண்டும், விஜய நகரத்தாரது மூன்றும் படி எடுக்கப் பட்டுள்ளன.


போன்:  +91- 4367 - 279 374

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் மன்னார்குடியில் இருந்து தெற்கே 21 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11-302 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


துர்வாசருக்கு இறைவன் நடனக் காட்சி தந்தது.

முருகப் பெருமான் 60000 முனிவர்களுக்கும், துர்வாசருக்கும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தது இத்தலத்தில் தான் என்பது ஐதீகம்.