சோமேஸ்வரர் திருக்கோயில் - தல வரலாறு

 

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர் : சோமேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : தேனார் மொழியாள், சோமசுந்தரி
தல மரம் : வேம்பு
தீர்த்தம் : மகாமக தீர்த்தம், சோமதீர்த்தம்
வழிபட்டோர் : சந்திரன், வியாழன் ,நவகன்னியர்கள், இராமர்
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்,

தல வரலாறு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 91 வது தேவாரத்தலம் ஆகும்.

இத்தலத்தில் இராமபிரான், இராவணனைக் கொல்ல ருத்ராம்சம் வேண்டி சிவபெருமானை வழிபட்டு உடலில் ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் (காய - ஆரோகணம்) காரோணம் என்று பெயர் பெற்றது.


உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம்.

சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார்.


சிவபெருமான் குடத்தின் மீது அம்பைச் செலுத்திய போது அமுத கும்பத்திற்கு ஆதாரமாக இருந்த உரி சிதறி விழுந்தது. அவ்விடத்தில் ஒரு லிங்கம் தோன்றியது. இந்த லிங்கத்தை சந்திரன் வழிபட்டான். எனவே இவ்வாலயத்திலுள்ள இறைவனுக்கு சோமேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

நவகன்னியர்கள் வழிபட்ட தலம் என்ற பெருமை இத்தலத்திற்குள்ளது. கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய நவகன்னியர்களுக்கு நெடுங்காலமாக ஒரு குறை. மக்கள் நீராடி தங்கள் பாவங்களை தங்கள் மீது கழுவிச் செல்கிறார்கள். அப்படிச் சேர்ந்த பாவங்களை நாங்கள் சுமக்க வேண்டுமா என்று ஈசனிடம் அவர்கள் முறையிட்டனர். ஈசன் நவகன்னியர்களையும் அழைத்துக் கொண்டு வந்து கும்பகோணம் மகாமக தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் தீரும் என்றருளினார். ஈசனும் மகாமகக் குளத்தின் வடகரையில் எழுந்தருளினார்.

காசி விஸ்வநாதர், விசாலாட்சி என்ற பெயர்களுடன் இறைவன், இறைவி எழுந்தருளியிருக்கும் இக்கோவிலே குடந்தைக் காரோணம் என்று பலரால் கூறப்படுகிறது.

திருஞானசம்பந்தர் தனது பதிகத்தின் 7-வது பாடலில் தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங் குடமூக்கிற் கானார்நட்டம் உடையார்செல்வக் காரோணத்தாரே என்று சோமேஸ்வரர் ஆலயத்திலுள்ள இறைவி தேனார்மொழி அம்பிகையைக் குறிப்பிடுவதால், இதுவே பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது.

அமுத குடம் உடைந்தபோது சிதறிய தீர்த்தம் இத்தலத்தின் முன்பு குளம்போல பெருகியது. இக்குளத்திற்கு சந்திரபுஷ்கரணி என பெயர். காலப்போக்கில் இக்குளம் அழிந்துவிட்டது. முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து ஒற்றைக்காலில் பாதரட்சையுடன் காட்சி தருவதை கும்பகோணம் சோமேஸ்வரர் கோயிலில் காணலாம்.

ஒரே பிரகாரத்தைக் கொண்ட இக்கோயிலில் சந்திரனும், வியாழனும் பூஜித்துள்ளனர். எனவே திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இத்தலத்தை வழிபடுவது சிறந்தது. இக்கோயிலில் 1964ம் ஆண்டு பக்தர்கள் ஒன்றுகூடி வித்தியாசமான முயற்சி ஒன்றை எடுத்தனர். ஒருவர் ஒரு லட்சம் வீதம் 100 பேர் சேர்ந்து "சிவாய நம' என்ற பஞ்சாட்சர மந்திரத்தை எழுதினர். மொத்தத்தில் ஒரு கோடி மந்திரம் தேறியது. எழுதியவற்றை வீணாக்காமல் பைண்ட் செய்து நூறு புத்தகங்களையும் ஒரு பெட்டகத்தில் அடுக்கி கோயிலில் வைத்துவிட்டனர். மிக அருமையான இந்த பெட்டகம் 40 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

காணா நட்டம் உடையார்:
இத்தலத்தில் நடராஜ பெருமான் தனி சன்னதியில் சிவகாமி அம்பாளுடன் காட்சி தருகிறார். இவருக்கு "காணா நட்டம் உடையார்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரைப் பார்க்காமல் சென்றால், சென்றவருக்குத்தான் நஷ்டமே ஒழிய, இறைவனுக்கு ஏதும் இல்லை என்ற பொருளில் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவரை வணங்கினால் வியாபார விருத்தி, தொழில் விருத்தி, உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை.


கோவில் அமைப்பு:

இக்கோயிலுக்கு மூன்று வாயில்களும் ஒரு பிரகாரமும் உள்ளது. கிழக்கிலுள்ள இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மாலீசர் மற்றும் மங்களநாயகி அம்பிகையை தரிசிக்கலாம். மகாவிஷ்ணு வழிபட்ட ஈஸ்வரர் என்பதால் சிவனுக்கு மாலீசர் என்ற பெயர் ஏற்பட்டது.

அடுத்துள்ள கட்டைகோபுரத்தை கடந்துவந்தால் சோமநாதர் மற்றும் தேனார்மொழி அம்பிகையை தரிசிக்கலாம். வடக்கு வாசல் வழியாக வந்தால் சோமேஸ்வரரையும், சோமசுந்தரியையும் தரிசிக்கலாம். ஆக எத்திசையில் இருந்து வந்தாலும் இறைவனின் அருள் கிடைக்கும் தலம் இது. முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து ஒற்றைக்காலில் பாதரட்சையுடன் காட்சி தருவதை கும்பகோணம் சோமேஸ்வரர் கோயிலில் காணலாம்.

இக்கோயிலுக்கு மூன்றுவாசல்கள் உள்ளன. ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மாலீசர் மற்றும் மங்களநாயகி அம்பிகையை தரிசிக்கலாம். திருமால் வழிபட்ட ஈஸ்வரர் என்பதால் சிவனுக்கு மாலீசர் என்ற பெயர் ஏற்பட்டது. கட்டைகோபுரத்தை கடந்துவந்தால் சோமநாதர் மற்றும் தேனார்மொழி அம்பிகையை தரிசிக்கலாம்.

உள் மண்டபத்தில் சோமாஸ்கந்தர் அருள்பாலிக்கிறார். கருவறை சுவர்களில் எட்டுபேர் வணங்கிய நிலையிலான சிற்பங்கள் உள்ளன. ஆலயத்தில் பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர். நவக்கிரக சந்நிதியும் இவ்வாலயத்தில் உண்டு. கோஷ்டத்தில் தனி சந்நிதியில் அருள்தரும் தட்சிணாமூர்த்தி உள்ளார்.

சிறப்புக்கள் :

இக்கோயிலில் உள்ள கல்யாண விநாயகரை 11 திங்கட்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டால் பெண்களுக்கு திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் நடராஜ பெருமான் தனி சன்னதியில் சிவகாமி அம்பாளுடன் காட்சி தருகிறார். இவருக்கு "காணா நட்டம் உடையார்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

போன்:  -

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

கும்பகோணம் நகரில் மகாமகக் குளத்தின் வடகரையில் இத்தலம் அமைந்திருக்கிறது.



நவகன்னியர்கள் வழிபட்ட தலம் என்ற பெருமை இத்தலத்திற்குள்ளது.



முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து ஒற்றைக்காலில் பாதரட்சையுடன் காட்சி தருவதை கும்பகோணம் சோமேஸ்வரர் கோயிலில் காணலாம்.

இத்தலத்தில் நடராஜ பெருமான் தனி சன்னதியில் சிவகாமி அம்பாளுடன் காட்சி தருகிறார். இவருக்கு "காணா நட்டம் உடையார்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.